News April 16, 2025
தஞ்சை: கோழிப்பண்னையில் தீ விபத்து

தஞ்சை, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஒளிராமன்காடு கிராமத்தைச் சேர்ந்த மகாலட்சுமி (48) என்பவர் பர்மா காலனி என்ற இடத்தில் கொட்டகை அமைந்து 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று கோழிப்பண்ணையில் தீ விபத்து ஏற்பட்டு 7 ஆயிரம் பிராய்லர் கோழிகளும் கருகி உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 9, 2025
தஞ்சை: வெறிநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் பலி

தஞ்சாவூர் இராமநாதபுரம் கிராமம் தெற்கு மூப்பனார் தெருவைச் சேர்ந்தவர் எஸ். சரவணன் இவர் மாடுகள் மற்றும் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் அவரது ஆடுகளை சுமார் 10 தெரு நாய்கள் கடித்துக் குதறி ஏறத்தாழ ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 6 ஆடுகள் உயிரிழந்ததால் சரவணன் குடும்பத்தினர் வேதனையடைந்தனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News November 9, 2025
தஞ்சை: பெண்ணிடம் 10 பவுன் நகை கொள்ளை

ஒரத்தநாடு அருகே தமிழ்ச்செல்வி என்ற பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த வீரமணி, வீரசேகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவர்களிடம் இருந்து சுமார் 8.30 பவுன் தங்க நகைகள் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும்,இவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
News November 9, 2025
தஞ்சை நீதிமன்றம் அதிரடி

செங்கிப்பட்டியில் கடந்த 2020ம் ஆண்டு சத்தியபாமா என்ற பெண்ணிடம் 10 சவரன் தாலி செயினை வழிப்பறி செய்ததாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருச்சியை சேர்ந்த சண்முகம் (35), அருள் (38) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இருவருக்கும் மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


