News May 17, 2024
தஞ்சை: கொலை வழக்கில் மேலும் இருவர் கைது

நீடாமங்கலத்தை சேர்ந்தவர் ஹரிகரன் பழக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 28ஆம் தேதி தஞ்சை, வல்லம் புறவழிச் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தொழில் போட்டி காரணமாக நடைபெற்ற இந்தப் கொலையில் ஏற்கனவே ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தற்போது கூலிப்படையை சேர்ந்த அஜித், தென்னரசு ஆகிய இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.
Similar News
News February 7, 2026
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள், தஞ்சாவூர், பாபநாசம், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
தஞ்சை: பள்ளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.28ஆம் தேதி என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (பிப்.6) இரவு 10 முதல், இன்று (பிப்.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


