News April 29, 2025
தஞ்சை கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தொழிலாளர் தினமான (மே.1) தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடக்க உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று விவாதிக்க உள்ளனர். எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழை அளவு!

நமது தஞ்சையில் நேற்று 17.09.2025 ஆம் தேதி கனமழைக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. அதன்படி
1.திருவிடைமருதூர் 81.2 மி.மீ
2.மஞ்சளாறு 65.2 மி.மீ
3.ஈச்சன்விடுதி 3மி.மீ
4.மதுக்கூர் 2.8 ம.மீ
5.பட்டுக்கோட்டை: 22 மி.மீ
6.பூதலூர் 25.4 மி.மீ
7.பாபநாசம் 14 மி.மீ
8.வல்லம் 10 மி.மீ
9.திருவையாறு: 8 மி.மீ
ஆகிய இடங்களில் அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. SHARE பண்ணுங்க!
News September 18, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (செப்.17) இரவு 10 மணி முதல் இன்று(செப்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காலவர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 17, 2025
தஞ்சை மாவட்ட வளர்ச்சி பணி ஆய்வு கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் இன்று (செப்.17) நடைபெற்றது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம். அரவிந்த் தலைமையில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் முன்னிலையில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, ஆலோசனை மேற்க்கொள்ளப்பட்டது.