News April 17, 2025
தஞ்சை: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உளுந்து கொள்முதல்

தஞ்சை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஒரத்தநாடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலமாக நடப்பு 2025-26-ம் ஆண்டில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உளுந்து மற்றும் பச்சைப்பயறு நன்கு சுத்தம் செய்து எடுத்துவர வேண்டும். ஈரப்பதம் 12% க்குள் இருக்குமாறு உலர வைத்து, மற்ற பொருட்கள் கலப்பின்றி விவசாயிகள் கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
தஞ்சை: SBI வங்கியில் வேலை.. தேர்வு கிடையாது!

தஞ்சை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள், வரும் டிச.23-க்குள் இங்கு<
News December 4, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்களின் முன்னேற்றத்திற்காக சிறப்பாகச் சேவை செய்த பெண்களுக்கு வழங்கப்படும் “ஔவையார் விருது – 2026” ற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் https://awards.tn.gov.in என்ற இணையதளத்திலும் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பிக்கலாம் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News December 4, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் செயல்படும் மனநல மருத்துவமனைகள், போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்கள், மனநலன் பாதிக்கப்பட்டவா்களுக்கான மறுவாழ்வு மையங்கள், போதை பயன்பாட்டுக்கு ஆளானவா்களுக்கான மறுவாழ்வு மையம் ஆகியவை சட்டப்படி உரிமம் பெற மாநில மனநல ஆணையத்திடம் ஒரு மாதத்திற்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.


