News August 9, 2024
தஞ்சை எஸ்.பி. பதவி உயர்வு

தமிழ்நாட்டில் தஞ்சை, கள்ளக்குறிச்சி,பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் 24 காவல் அதிகாரிகளுக்கு எஸ்.பி-ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருந்த ஜெயச்சந்திரன் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
Similar News
News September 13, 2025
தஞ்சாவூர்: நாளை பொதுவிநியோக குறைதீர் கூட்டம்

செப்டம்பர் 2025 மாதத்திற்கான பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், இன்று 13.09.2025 சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் குறைகளை தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
தஞ்சையில் பயிற்சி வகுப்புகள் கலெக்டர் அறிவிப்பு

தஞ்சையில் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 17ஆம் தேதி தொடங்கியுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 13, 2025
தஞ்சை புதிய கோட்டாட்சியர் பொறுப்பேற்பு

தஞ்சாவூர் வருவாய் கோட்ட புதிய கோட்டாட்சியராக நித்தியா இன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இவர் நாமக்கல் மாவட்டத்தில் துணை ஆட்சியர் இருந்து வந்தார். இந்த நிலையில் இன்று தஞ்சை ராஜ ராஜ சோழன் அருகே மணிமண்டபம் அருகே கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியராக நித்தியா பொறுப்பேற்றார். ஏற்கனவே கோட்டாட்சியராக இருந்த இலக்கியா தற்போது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார்.