News April 5, 2025

தஞ்சை: உணவக உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

image

தஞ்சவூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவக உரிமையாளர்கள் சங்க ஆய்வு கூட்டம் நேற்று (ஏப் 04) நடைபெற்றது. இதில், அனைத்து உணவகங்கள் மற்றும் டீ கடைகளில் ஒரு முறைக்கு மேல் பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் விற்பனை செய்ய வேண்டும். பாலித்தீன் பைகளில் டீ, காபி, உணவு பொருட்கள் போன்றவை பார்சல் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கப்பட்டது.

Similar News

News April 17, 2025

தஞ்சை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உட்பட 3 மாவட்டங்களுக்கு காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என IMD தெரிவித்துள்ளது. ஆகவே பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளை அதற்கேற்றாற் போல் தகவமைத்து கொள்ளவும், மழை நேரங்களில் குழந்தைகளை கவனத்துடன் கையாளவும் அறிவுறுத்தப்படுகிறது. மழை நேர மின்தடை புகார்களுக்கு 94987 94987 என்ற பிரத்யேக சேவை எண்ணை TNEB அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News April 17, 2025

காவல்துறை உதவி ஆய்வாளர் உட்பட மூவர் பணியிட மாற்றம்

image

திருவையாறு, நடுக்காவேரியில் விஷம் குடித்து இறந்த சகோதரிகள் வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஷர்மிளா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்த நிலையில், நேற்று ஏப்ரல் 16 புதன்கிழமை நடுக்காவேரி காவல் நிலையத்தில் தலைமை காவலர் மணிமேகலை, உதவி ஆய்வாளர்கள் அறிவழகன், கலியபெருமாள் மற்றும் காவலர் சசிகுமார் ஆகியோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News April 16, 2025

தஞ்சை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கலந்தாய்வுக் கூட்டம் இன்று (ஏப்.16) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், வருவாய் அலுவலர் தெ. தியாகராஜன் மற்றும் பல அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!