News September 12, 2024

தஞ்சை அருகே 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

image

தஞ்சையில் கடனுதவி பெற்று சிறப்பாக செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் நேற்று ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் அருகே மணக்கரம்பையில் 2 ஏக்கா் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இத்தொழில்நுட்பப் பூங்கா மூலம் 300க்கும் அதிகமான இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் அதிகமாக அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

Similar News

News November 20, 2024

தஞ்சை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

image

தமிழ்நாடு முதல்வரின் ‘உங்களைத் தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை ஒன்றியம், வீராகுறிச்சி ஊராட்சியில் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொதுவிநியோகத் திட்ட சேமிப்பு கிடங்கில் உணவு பொருட்கள் இருப்பு குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் உடன் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News November 20, 2024

தஞ்சை ஆசிரியை குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர்

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) மாணவர்கள் கண் எதிரே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்ட ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார். மேலும் இச்சம்பவத்தை ‘மிருகத்தனமானது’ என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், குற்றவாளிக்கு உரிய தணடனை பெற்று தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

News November 20, 2024

தஞ்சை அருகே ஆசிரியை கொலை: பள்ளிக்கு ஒருவாரம் விடுமுறை

image

தஞ்சை அருகே மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (நவ.20) காலை ஆசிரியை ரமணி என்பவர் மாணவர்கள் கண்முன்னே கொடூரமாக கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். இதனையடுத்து அப்பள்ளியில் இன்று ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கு இந்த வாரம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அப்பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.