News August 3, 2024

தஞ்சையில் 14 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதில், தஞ்சை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி பதவி உயர்வு வழங்கப்பட்டு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.

Similar News

News December 19, 2025

தஞ்சை அருகே தீக்குளித்து தற்கொலை

image

பூதலூர் பெரியார்புரம் சேவையன் நகர் பகுதியைச் சேர்ந்த முருகராஜ் (34), நண்பருடன் பைனான்ஸ் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 19, 2025

தஞ்சை: ஆட்டோ வாங்க 3 லட்சம் உதவி!

image

தஞ்சை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.

News December 19, 2025

தஞ்சை: மது போதையில் இளைஞர் வெட்டி படுகொலை

image

தஞ்சை, அம்மாகுளத்தில் சிராஜீதீன் என்பவரும் – பிரதீப் என்பவரும் மது அருந்தி கொண்டிருந்துள்ளனர். அப்போது பிரதீப் தீப்பெட்டி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் பிரதீப் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிராஜீதீனை சரமாரியாக வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த சிராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரதீபை கைது செய்தனர்.

error: Content is protected !!