News April 16, 2025

தஞ்சையில் ரூ.45,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள குறைதீர்ப்பாளர் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்பளமாக மாதம் ரூ.45,000 வரை வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <>tnrd.tn.gov.in <<>>வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 05.05.2025 ஆகும். அரசு வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்…

Similar News

News November 17, 2025

தஞ்சை: மழையா? இதை மறக்காதீங்க!

image

தஞ்சை மக்களே, தமிழகத்தில் பருவமழை தொடங்கி தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மழையால் பவர் கட், மின்கம்பி அறுந்து விழுவது, பியூஸ் போவது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் கவலைப்பட வேண்டாம். ‘94987 94987’ என்ற மின்வாரிய உதவி எண்னை தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண், இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், தமிழகத்தில் எங்கு இருந்தாலும் பழுது நீக்கி தரப்படும்! SHARE

News November 17, 2025

தஞ்சை: சாலை விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி

image

பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த பள்ளிகொண்டான் சேர்ந்த பாலாஜி இரு தினங்களுக்கு முன் பணி முடிந்து வீடு திரும்பும்போது, கரிக்காடு பயணியர் மாளிகை அருகே சாலையில் இருந்த சென்டர் மீடியனில் மோதி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News November 17, 2025

தஞ்சை: பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய மூதாட்டி கைது!

image

வாட்டாத்திக்கோட்டை போலீஸ் சரக பகுதியில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அந்தப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட நிலையில் சரோஜா (64) என்பவர் தனது வீட்டில் ஒரு பெண்ணை கட்டாயப்படுத்தி விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாட்டாத்திக்கோட்டை போலீசார் சரோஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!