News April 13, 2025
தஞ்சையில் முருகனுக்கு அறுபடை வீடு இருக்கு! தெரியுமா?

தஞ்சையில் உள்ள முருகனின் அறுபடை வீடு, முதல் படைவீடு: சுப்பிரமணிய சுவாமி கோயில், அலங்கம். இரண்டாம் படைவீடு: சுப்பிரயமணிய சாமி கோயில், பூக்கார தெரு. மூன்றாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில் சின்ன அரிசிக்கார தெரு. நான்காம் படைவீடு: சுவாமிநாத சுவாமி கோயில், ஆட்டுமந்தை தெரு. ஐந்தாம் படைவீடு: பாலதண்டாயுதபாணி கோயில், குறிச்சி தெரு கீழவாசல். ஆறாம் படைவீடு: பால தண்டாயுதபாணி சுவாமி கோயில், வடக்கு அலங்கம்.
Similar News
News January 2, 2026
தஞ்சாவூர்: செல்போன், புளூடூத் பயன்படுத்த கூடாது – எச்சரிக்கை

அரசு போக்குவரத்துக்கழக் கும்பகோணம் கோட்டம் நிர்வாக இயக்குனர் தசரதன் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுனர்கள் பணியின் போது செல்ஃபோன் பயன்படுத்துவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே ஓட்டுனர்கள் பணியின் போது, செல்ஃபோன், புளூடூத், ஹெட்செட் போன்ற சாதனங்களை பயன்ப்டுத்த கூடாது, இதனை மீறுவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
News January 2, 2026
தஞ்சாவூரில் மின்தடை அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், திருப்பனந்தல், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.03) சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே அத்துணை மின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெறும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
News January 2, 2026
தஞ்சாவூர்: மனைவி கண்முன்னே கணவன் பலி – சோகம்

நாஞ்சிக்கோட்டை சாலை ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் காளிமுத்து. இவர் நேற்று முன்தினம் தனது மனைவி சுப்பு லட்சுமியுடன் தஞ்சை-திருச்சி புறவழிச்சாலையில் சென்ற போது, அவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கார் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ஓட்டுனரை கைது செய்தனர்.


