News April 10, 2025

தஞ்சையில் முதலைகள் பாதுகாப்பு மையம், அமைச்சர் அறிவிப்பு

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தஞ்சை மாவட்டம் அணைக்கரை பகுதியில் முதலைகள் அதிகம் இருப்பதால் இதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படக் கூடாது எனும் காரணத்தினால் முதலைகள் பாதுகாப்பு மையம் அமைக்க ரூபாய் 32 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று அமைச்சர் க. பொன்முடி தெரிவித்தார்.

Similar News

News December 20, 2025

தஞ்சை: கல்லூரி பேருந்து மோதி உயிரிழப்பு

image

செங்கிப்பட்டி அருகே திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த கல்லூரி பேருந்து சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி மீது மோதியது. இந்த விபத்தில் மூதாட்டி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விபத்து குறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

தஞ்சாவூர்: SIR பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

image

தமிழகம் முழுவதும் SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் 2,06,503 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <>electoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்களது வாக்காளர் அட்டை எண்ணை பதிவிட்டு எளிதாக தெரிந்து கொள்ளலாம். SHARE NOW

News December 20, 2025

தஞ்சை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

image

திருவைக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!