News March 29, 2025

தஞ்சையில் மாநகரட்சி கூட்டம், பாதியிலேயே கிளம்பிய மேயர்

image

தஞ்சையில் பட்ஜெட் கூட்டம், நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக கவுன்சிலர் சரவணன் திருவோடு ஏந்தி சாமியார் தோற்றத்தில் பங்கேற்றார். கவுன்சிலர் சரவணன், தஞ்சை மாநாட்டு அரங்கு திரையரங்கமாக மாற்றப்பட்டு தனியாருக்கு விட்டதில் ரூ.1 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு மேயர் பதிலளிக்க வேண்டும், என கேள்வி எழுப்பினார். அதற்கு மேயர் ராமநாதன் பதிலளிக்காமல் அரங்கை விட்டு சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Similar News

News November 22, 2025

தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் இன்று (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

தஞ்சை: பள்ளி மாணவி கர்ப்பம்; ராணுவ வீரர் கைது

image

திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி வயிற்று வலி காரணமாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான வீரமணி (65) என்வரை திருவையாறு போலீசார் கைது செய்தனர்.

News November 22, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (நவ.21) இரவு 10 மணி முதல் இன்று (நவ.22) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!