News March 21, 2024
தஞ்சையில் மழைக்கு வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று(மார்ச் 21) மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் இந்த மழை குளுமையை ஏற்படுத்தும்.
Similar News
News December 12, 2025
பொதுவிநியோக குறைதீர் கூட்டம்; ஆட்சியர் அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களிலும் பொதுவிநியோகத்திட்ட மக்கள் குறைதீர் கூட்டம் நாளை(டிச.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 10 மணி வரைநடைபெற உள்ளது. எனவே, பொதுமக்களுக்கு குறைகள் ஏதும் இருப்பின், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் மனுக்கள் அளித்து பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News December 12, 2025
தஞ்சாவூர்: டிச.31 கடைசி நாள் – ரூ.1000 அபராதம்!

பான் கார்டு மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. டிச.,31க்கு பிறகு இணைத்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு செயலிழந்து, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க <
News December 12, 2025
தஞ்சாவூர்: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணிகளின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE IT!


