News April 6, 2025
தஞ்சையில் நாளை மக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். கடந்த திங்கட்கிழமை ரம்ஜான் பண்டிகை என்பதால் கூட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாளை ஏப்ரல் 7ஆம் தேதி வழக்கம்போல் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்களை வழங்கி தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News April 19, 2025
போக்குவரத்துக் கழகத்தில் வேலை விண்ணப்பிப்பது எப்படி

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தஞ்சை மாவட்டத்தில் 101 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஏப்.,21ஆம் தேதிக்குள் இங்கு<
News April 19, 2025
தஞ்சை இளைஞரை கௌரவித்த சிங்கப்பூர் அரசு

சிங்கப்பூரில் கடந்த 8ஆம் தேதி, ரிவர் வேலி சாலையில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய ஆந்திர துணை முதல்வர் பவன்கல்யாண் மகன் உள்ளிட்ட 22 பேரை காப்பாற்றிய தஞ்சை, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன் உட்பட 4 பேரை சிங்கப்பூர் அரசு பாராட்டி விருது வழங்கி கௌரவித்துள்ளது. சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு “Community Lifesaver Award” வழங்கி கௌரவித்துள்ளது.
News April 18, 2025
தஞ்சாவூர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <