News March 28, 2025
தஞ்சையில் செல்போன் பழுது நீக்க இலவச பயிற்சி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலைவாய்ப்பு மைய இயக்குனர் அங்கையற்கண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தஞ்சை ஈஸ்வரி நகரில் உள்ள கிராமிய சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் இலவச செல்போன் பழுது நீக்கம் (ம) சேவைக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளது. 30 நாட்கள் நடைபெறும் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வருகிற ஏப்ரல் 5 தேதி கடைசி நாளாகும். தகுந்த ஆவணத்துடன் அலுவலகத்தை தொடர்பு கொள்ள கூறப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2025
தமிழில் பெயர் பலகை வைக்க கால அவகாசம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களிலும் தமிழில் பெயர் பலகை வைக்க (மே.15) வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். எனவே, அனைத்து கடைகள், வணிகர் சங்கங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News April 8, 2025
பொதுமக்களிடம் இருந்து 620 புகார் மனுக்கள் பெறப்பட்டன

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குடும்ப அட்டை, பட்டா, கல்விக் கடன், முதியோர் உதவித்தொகை என 620 புகார் மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
News April 7, 2025
பணக் கஷ்டத்தை நீக்கும் தஞ்சை குபேரபுரீஸ்வரர் கோயில்

தஞ்சை வெண்ணாற்றின் தெற்கு கரையோரம் அமைந்துள்ளது இந்த தஞ்சபுரீஸ்வரர் கோயில். குபேரன் தன் செல்வங்களை இழந்து இங்குள்ள சிவனை வழிபட்டதில் அவருக்கு அனைத்து செல்வங்களும் மீண்டும் கிடைக்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள இறைவன் குபேரபுரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். தீபாவளி திருநாளிலும், பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் இங்கு வழிபட்டால் செல்வம் பெருகும் என கூறப்படுகிறது. இதை SHARE செய்யவும்