News August 18, 2024

தஞ்சையில் கூட்டு வன்கொடுமை: பெண் எஸ்.ஐ. மாற்றம்

image

தஞ்சை மாவட்டத்தில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றபோது, அவரை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க பெண் போலீஸ் எஸ்.ஐ கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு உடனடி சட்ட உதவி வழங்காமல் அலைக்கழிக்க செய்ததாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில் பாப்பாநாடு பெண் எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றி தஞ்சை எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 1, 2025

தஞ்சை: ஆடு மேய்க்கும் தொழிலாளி பரிதாப பலி

image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே ஏனாதி கிராமத்தில் ஆடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி (21) என்பவர், சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவோணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை: கனமழையால் 48 ஆடுகள் பலி!

image

ஒரத்தநாடு வட்டம் பின்னையூர் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கக்கரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த யேசு என்பவர், கிடையமைத்து சுமார் 350 ஆடுகளை அமைத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மலைச்சாரலில் பாதிக்கப்பட்ட 48 ஆடுகள் உயிரிழந்தது. இதுகுறித்து, அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.

error: Content is protected !!