News December 6, 2024
தஞ்சையில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை (டிச.7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கை – தமிழக கடற்கரையை டிசம்பர் 12ஆம் தேதி அடையும் என கூறப்படுகிறது. இதனால் டிசம்பர் 11ஆம் தேதி தஞ்சை மாவட்டத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 22, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.22) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 22, 2025
தஞ்சை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களை நிவர்த்தி செய்யவும் இன்று (நவ.22) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே இந்த வாய்ப்பினை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
தஞ்சை: பள்ளி மாணவி கர்ப்பம்; ராணுவ வீரர் கைது

திருவையாறு அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி வயிற்று வலி காரணமாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மாணவி அளித்த தகவலின் பேரில், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரரான வீரமணி (65) என்வரை திருவையாறு போலீசார் கைது செய்தனர்.


