News March 29, 2025
தஞ்சையில் உயர் கல்வி & வேலைவாய்ப்பு வழிகாட்டி நிகழ்ச்சி

தஞ்சை பெரியார் பல்கலைக்கழக வள்ளுவர் கூட்டரங்கில் இன்று (மா.29) காலை 10 மணிக்கு கல்லூரி கனவு முகாம் நடைபெற உள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் தன்னார்வ இயக்கம் மற்றும் டான் போஸ்கோ குழுவும் இணைந்து, பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தொழில், வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்புகள் குறித்து ஆலோசனை முகாம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News October 17, 2025
தஞ்சை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா ?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News October 17, 2025
தஞ்சை: தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் நெரிசலை குறைக்கும் வகையில் தென் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, (அக்.17) நாளை மட்டும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சென்னை எக்மோரில் இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு, கும்பகோணம் நிலையத்தை காலை 05.28 மணிக்கு வந்தடையும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.
News October 17, 2025
தஞ்சை: பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்ல திட்டமிட்டிருப்போம். அவ்வாறு நீங்கள் பயணிக்கும் போது பேருந்துலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதற வேண்டாம். ‘044-49076326’ என்ற எண்னை தொடர்பு கொண்டு, உங்கள் டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும் உங்கள் பொருட்கள் அனைத்தும் பத்திரமாக வந்து சேரும். ஷேர் பண்ணுங்க !