News January 23, 2025
தஞ்சையில் இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்

பந்தநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருப்பூர் மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சட்ட விரோதமாக புதுச்சேரி யூனியன் பிரேதச சாராய மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1510 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. கலியபெருமாள் மற்றும் சுமதியை 20ம் தேதி கைது செய்த நிலையில் இன்று (ஜன.23) மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News November 26, 2025
தஞ்சை: அரசு வேலைவாய்ப்பு பெற இலவச பயிற்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 4 போன்ற தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்று பயன் பெற்று வருகின்றனர். மேலும் சுகாதார ஆய்வாளர் பணிக்கு தயாராகும் மாணவர்களும் இதில் பங்கேற்கலாம் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
News November 26, 2025
JUST IN தஞ்சை: மிக கனமழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சென்யார்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் வரும் நவ.28 & நவ.29 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
News November 26, 2025
தஞ்சாவூர்: இருசக்கர வாகனம் திருடிய 2 பேர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட திருவையாறு பகுதியை சேர்ந்த ஆஷிக் மற்றும் செல்லையா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 10 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


