News April 7, 2025
தஞ்சையில் ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை

திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் காவேரி செல்வி. கடந்த 2023 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் பணிபுரிந்து வந்த நிலையில், இதற்காக தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் 189.40 மிமீ மழை பதிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தஞ்சாவூர் 3 மிமீ, திருவையாறு 5 மிமீ, ஒரத்தநாடு 30 மிமீ, பாபநாசம் 8 மிமீ, கும்பகோணம் 11 மிமீ, திருவிடைமருதூர் 7.80 மிமீ, பட்டுக்கோட்டை 7.50 மிமீ, அதிராம்பட்டினம் 7.70 மிமீ, பேராவூரணி 8 மிமீ, மதுக்கூர் 7.60 மிமீ என மாவட்டம் முழுவதும் சராசரியாக 189.40 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.
News December 17, 2025
தஞ்சாவூர்: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்கள் நிலங்களின் பட்டா விவரங்களை அறிய இனி அலுவலகங்களுக்கு செல்ல தேவையில்லை. உங்கள் போனில் <
News December 17, 2025
தஞ்சை: டிப்ளமோ படித்தவர்களுக்கு ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான ரைட்ஸ் நிறுவனத்தில் உள்ள பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 150
3. வயது: அதிகப்படியாக 40
4. சம்பளம்: ரூ.16,338 – 29,735
5. கல்வித் தகுதி: டிப்ளமோ
6. கடைசி தேதி: 30.12.2025
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


