News April 18, 2025

தஞ்சாவூர்: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.இ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஷேர் செய்யவும்.

Similar News

News December 6, 2025

தஞ்சை மாவட்டத்தில் இலவச விவசாய மின் இணைப்பு

image

தஞ்சை மாவட்டத்தில் மாவட்டத்தில் 2025-26-ம் ஆண்டிற்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்க 544 பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதுவரை 407 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 137 விவசாயிகளுக்கு விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சித்ரா கூறியுள்ளார்.

News December 6, 2025

தஞ்சை: தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பெண்

image

சேவப்பநாயக்கள்வாரியை சேர்ந்தவர் மகாலட்சுமி (26). இவர் நேற்று மாலை தஞ்சை சீனிவாசபுரம் அருகே சீதாநகர் பகுதியில் ரெயில் தண்டவாளம் அருகே படுகாயங்களுடன் இறந்து கிடந்தார். இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு தற்கொலையா? அல்லது அடிபட்டு இறந்தாரா ? என்று விசாரித்து வருகின்றனர்.

News December 6, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் இன்று (டிச.6) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!