News December 4, 2024
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தஞ்சாவூர் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கால்நடைகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் ஏற்றி சென்ற போது அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். கால்நடைகளுக்கு தேவையான தீவனம், தண்ணீர் வழங்க வேண்டும். ஒவ்வொரு கால்நடைகளுக்கும் குறிப்பிட்ட இடைவெளி வாகனத்தில் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
Similar News
News July 11, 2025
25 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிக்கு வீரர்கள் தேர்வு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் 25 வயதுக்கு உட்பட் டோருக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் தஞ்சை மாவட்ட அணிக்கான வீரர்கள் தேர்வு வருகிற 13ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தஞ்சை பரிசுத்தம் நகரில் உள்ள ஒலிம்பியன் கிட்டு மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் வீரர்கள் 1.9.2000க்குப் பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
தஞ்சாவூர் வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்கிற முழக்கத்துடன், தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் கும்பகோணத்துக்கு ஜூலை 22ஆம் தேதி மாலை 4 மணிக்கும், பாபநாசத்துக்கு 5 மணிக்கும், தஞ்சாவூருக்கு மாலை 6 மணிக்கும் வருகிறாா். தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் பகுதியிலிருந்து ரயிலடி வரை ரோடு ஷோவில் பங்கேற்கிறாா் என தஞ்சை மாவட்ட அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
BREAKING: தஞ்சை வருகை தரும் பிரதமர் மோடி

தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வரும் ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தரவுள்ளார். அதற்கு முன்னதாக அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பிரதமர் மோடியின் தமிழக வருகை அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. SHARE NOW