News November 25, 2024
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

நாளை நவம்பர் 25 தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News September 14, 2025
தஞ்சை: 16.09.2025 தேதியை குறித்து வச்சிக்கோங்க!

தஞ்சை மாவட்டத்தில் 16.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து தற்போது காணலாம்!
⏩தஞ்சாவூர்: அண்ணா நூற்றாண்டு மண்டபம்,
⏩பட்டுக்கோட்டை KKT சுமங்கலி மஹால்,
⏩ஆடுதுறை,வீரசோழன் கோ.சி.மணி திருமண மண்டபம்.
⏩திருவோணம் ஊராட்சி மன்ற அலுவலகம், பொய்யுண்டார்குடிகாடு
⏩கும்பகோணம் சோழன் மஹால், அண்ணலக்ரஹாரம்
⏩நாஞ்சிக்கோட்டை மாதாகோட்டை மக்கள் மன்றம்
SHARE பண்ணுங்க!
News September 14, 2025
கும்பகோணம்: அதிமுக கிளைக் அவைத்தலைவர் படுகொலை

கும்பகோணம் அருகே மாத்தூர் ஊராட்சியில் பெட்ரோல் பங்க் மற்றும் வட்டி தொழில், ரியல் எஸ்டேட் செய்யும் மாத்தூரில் அதிமுக கிளை கழக அவைத்தலைவர் கனகராஜ் (70) நேற்று இரவு அவரது இல்லத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இதையடுத்து நாச்சியார்கோயில் போலீசார் உடலை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு அனுப்பினர்.
News September 14, 2025
நாட்டு வெடி விற்பனை செய்த குற்றவாளி கைது

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், அம்மன் நகரில் தீபாவளியை முன்னிட்டு எவ்வித முன் அனுமதியும் இன்றி நாட்டு வெடிகளை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதன்படி பாபநாசம் டிஎஸ்பி முருகவேல், மேற்பார்வையில் கபிஸ்தலம் காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான உமையாள்புரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 41 மூட்டை வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது