News March 25, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் 

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் மார்ச்.22ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற இருந்தது. ஒரு சில நிர்வாக காரணங்களால் நடைபெறாமல் போனது. இந்நிலையில் வரும் மார்ச்.29ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க..

Similar News

News October 26, 2025

தஞ்சை: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

image

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்ங்க..

News October 26, 2025

தஞ்சை: திமுக முன்னாள் நிர்வாகி தற்கொலை

image

தஞ்சை மாவட்டம், திருச்சிற்றம்பலம் பாரதி நகரைச் சேர்ந்தவர் விமல் சங்கர் (42). இவர் பேராவூரணி வடக்கு ஒன்றிய திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் முன்னாள் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் ஆவார். இவர் மின்னணு சாதனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் வேலைகளையும் செய்து வந்துள்ளார். மேலும், கடன் தொல்லை காரணமாக அவர் நீண்ட நாட்கள் மன உளைச்சலில் இருந்த நிலையில், நேற்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

News October 26, 2025

தஞ்சை: அனைத்து டிபிசிகளுக்கும் விடுமுறை ரத்து!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாலும் – ஏற்கனவே நெல்லை கொண்டு வந்து விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் காத்திருப்பதாலும் இன்று (அக்.26) ஞாயிற்றுக்கிழமை அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் விடுமுறையின்றி செயல்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!