News March 26, 2025

தஞ்சாவூர் மற்றும் பெரம்பலுார் வழியாக சேலத்திற்கு புதிய ரயில்

image

தமிழகத்தில் சிமெண்ட் நகரான அரியலூரில் இருந்து தஞ்சாவூருக்கும், பெரம்பலுார் வழியாக சேலம் வரை புதிய ரயில் பாதை அமைக்க, மத்திய அரசிடம் எம்.பி.,க்கள் வலியுறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதனால் பலர் பயனடைவார்கள் என்பதால் தஞ்சாவூர், பெரம்பலூர், சிதம்பரம், திருச்சி, சேலம் எம்.பி. க்கள் இணைந்து மத்திய ரயில்வே அமைச்சரை வலியுறுத்தி,வேண்டும் என கோரிக்கை.

Similar News

News October 31, 2025

சங்ககிரியில் சிறுத்தை நடமாட்டமா? பீதியில் மக்கள்!

image

சங்ககிரி: ஒலக்கச்சின்னானுார், ஒருக்காமலை பகுதியில் அதிகளவில் மரங்கள் அடர்ந்துள்ளதால் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இந்தநிலையில் ஒருக்காமலை அருகே,நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறுத்தை சென்றதாக, அப்பகுதி மக்கள் இடையே தகவல் பரவியது. இதுகுறித்து வனவர் ரமேஸ் கூறுகையில், சிறுத்தை காலடி தடம் எதுவும் பதியவில்லை.மக்கள் புகாரால், வனத்துறையினர் கண்காணிப்பில் உள்ளனர்,” என்றார்.

News October 31, 2025

சேலத்தில் நர்சிங் மாணவி விபரீத முடிவு!

image

சேலம்: கொண்டலாம்பட்டி அருகே நெய்க்காரப் பட்டியை சேர்ந்த சங்கர் மகள் இந்துமதி (19). இவர் அரியானுாரில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி. நர்சிங் படித்து வந்தார்.இந்நிலையில் கடந்த.28 மாலை,இந்துமதிக்கும், அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வேதனை அடைந்த இந்துமதி, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 31, 2025

சேலம்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!