News March 21, 2024

தஞ்சாவூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

image

திமுக-வில் தஞ்சாவூர் தொகுதியில் 1996ஆம் ஆண்டிலிருந்து ஆறு தேர்தல்களாக தொடர்ந்து வெற்றி பெற்று வருபவர் பழனிமாணிக்கம். இந்த முறையும் அவருக்கே வாய்ப்புக் கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், புதுமுகமான முரசொலியைக் களமிறக்கியிருக்கிறது திமுக தலைமை. முரசொலி, 2014 முதல் 20 வரை திமுக-வின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். 2022இல் இருந்து தஞ்சாவூர் வடக்கு ஒன்றியச் செயலாளராக உள்ளார்.

Similar News

News August 31, 2025

தஞ்சை: ஆதார் கார்டில் திருத்தம் செய்ய எளிய வழி

image

மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
▶️ முதலில் இங்கே <>கிளிக்<<>> செய்து, ஆதார் எண்ணை பதிவிட்டு Login செய்யவும்
▶️ அப்டேட் பகுதிக்குச் சென்று ‘ADDRESS UPDATE’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்
▶️ அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
▶️ முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
▶️ பின்னர் ரூ.50 கட்டணம் செலுத்தி புதிய முகவரியை அப்டேட் செய்யலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News August 31, 2025

தஞ்சை: மகளிர் உரிமைத்தொகை பெற இத செய்ங்க!

image

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <>லிங்கில் கிளிக் <<>>செய்து தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News August 31, 2025

40 ஆண்டுகளுக்கு பிறகு இரயில் சேவை

image

திருநள்ளாறு – பேரளம் இடையே 23.5 கி.மீ., தொலைவுக்கு கடந்த 1986ம் ஆண்டு அகலப்பாதையாக மாற்றும் பணிக்காக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 29) முதல் வரும் 8ம் தேதி வரை வேளாங்கண்ணி திருவிழாவிற்காக விழுப்புரம், மயிலாடுதுறை, பேரளம், திருநள்ளாறு, காரைக்கால் வழியாக வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!