News March 20, 2024
தஞ்சாவூர் தேமுதிகவுக்கு ஒதுக்கீடு

வரும் 2024-நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக-வுக்கு தஞ்சாவூர் உள்பட 5 தொகுதிகள் ஒதுக்குக்கப்பட்டுள்ளது. இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாதா விஜயகாந்த் கூட்டாக அறிவித்தனர். இதனையடுத்து தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் போட்டியிட உள்ளனர். விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்க வாய்ப்புள்ளது.
Similar News
News August 9, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க முகாம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 மற்றும் 18 ஆகிய இரண்டு தேதிகளில் குடற்புழு நீக்கம் முகாம் நடைபெற உள்ளது. அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் இந்த முகாம் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளார். மேலும் இந்த முகாமில் 5,86,000 குழந்தைகள் மற்றும் 1,98,000 பெண்களும் பயன் அடைவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
News August 9, 2025
தஞ்சை: புலனாய்வுத் துறையில் வேலை! ரூ.1,42,400 சம்பளம்!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News August 9, 2025
தஞ்சை: பொது விநியோக குறைதீர் கூட்டம்

தஞ்சை மாவட்டத்திற்கான பொது விநியோக குறைதீர்க்கும் நாள் கூட்டம் தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர், கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மற்றும் திருவோணம் பகுதிகளில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளனர்.