News April 22, 2025
தஞ்சாவூர்: கோடைகால பயிற்சி முகாம்

தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 18 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகால பயிற்சி முகாம் ஏப்.25 முதல் மே.15 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதில் தடகளம், கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, ஹாக்கி உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
Similar News
News November 21, 2025
தஞ்சை: கூட்டுறவு உதவியாளர் பணி குறித்து அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நிறுவனங்களில், தஞ்சை மண்டலத்தில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான நேர்முக தேர்வு வருகிற 26-ம் தேதி (புதன்) சாமியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) https://www.drbtnj.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 21, 2025
தஞ்சை: மாணவர்களுக்கு முக்கிய தகவல்

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூர மற்றும் இணையவழிக் கல்வி முறையில் 2024-25ம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் டிச.2025 இல் தேர்வு எழுத, டிச.3 ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும், தாமதக் கட்டணத்துடன் டிச.8 வரை அவகாசம் உண்டு. தேர்வு நுழைவுச் சீட்டினை டிச.12 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என பல்கலைக்கழக அறிவிப்பு.
News November 21, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(நவ.19) இரவு 10 மணி முதல் இன்று(நவ.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


