News June 25, 2024

தஞ்சாவூர் எம்.பி. ஆனார் முரசொலி

image

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் முரசொலி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முரசொலி தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.

Similar News

News December 20, 2025

தஞ்சை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

image

திருவைக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

News December 20, 2025

தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், திருமலைசமுத்திரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, சேதுபாவச்சத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 20, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!