News May 7, 2025
தஞ்சாவூர்: அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் TN CM HELPLINE என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செயவும்.
Similar News
News December 20, 2025
தஞ்சை: 5 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவைக்காவூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் முன்விரோதம் காரணமாக கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக கார்த்திக், அரவிந்தராஜ், ஹரிராஜா, வெங்கடேசன், ஜெயவேல் ஆகிய ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
News December 20, 2025
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், திருமலைசமுத்திரம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, சேதுபாவச்சத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (டிச.20) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.19) இரவு 10 மணி முதல் இன்று (டிச.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!


