News September 15, 2024
தஞ்சாவூரில் ரூ. 17.75 கோடிக்கு தீர்வு

தஞ்சாவூா் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 302 வழக்குகளில் ரூ. 17.75 கோடி அளவுக்கு தீா்வு காணப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டத்திலுள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை சமரசமாகப் பேசி தீா்வு காண்பதற்காக தேசிய அளவிலான சிறப்பு மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
Similar News
News November 14, 2025
தஞ்சாவூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க.
News November 14, 2025
தஞ்சையில் 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் புதன்கிழமை வரை 2.54 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது 118 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. மாவட்டத்தில் மொத்தம் 1.82 லட்சம் டன் நெல் இருப்பும், 76 ஆயிரத்து 389 டன் அரிசி இருப்பும் உள்ளன. மாவட்டத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு 1.66 லட்சம் டன் நெல் சரக்கு ரயில் மற்றும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.
News November 14, 2025
தஞ்சாவூர்: B.E போதும்.. இஸ்ரோவில் வேலை ரெடி!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (ISRO) பல்வேறு பிரிவுகளின் கீழ் 141 காலியிடங்கள் நிரப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. சம்பளம்: ரூ.19,900 – 1,77,500/-
3. கல்வித் தகுதி: 10th, ITI, Diploma, B.Sc, B.E/B.Tech
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6. கடைசி தேதி: இன்று (14.11.2025)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8. BE முடித்தவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


