News August 26, 2024
தஞ்சாவூரில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் ஆா்.பொன்முடி நேற்று தெரிவித்துள்ளாா். அதன்படி ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பா் 9 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம் ஆகிய பகுதிகளிலிருந்து இரவு பகலாக இயக்கப்பட உள்ளன. இதனை பக்தர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கூறியுள்ளார். SHAREIT
Similar News
News November 23, 2025
தஞ்சை: வாகனம் மோதி பரிதாப பலி!

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் முதியவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
News November 23, 2025
தஞ்சை: வெளுக்க போகும் மழை – எச்சரிக்கை!

தென்கிழக்கு வாங்க் கடலில் நேற்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என்றும், இது வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (நவ.23) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 23, 2025
தஞ்சாவூர் அருகே தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை சன்னதி மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் ராஜா (60). இவருக்கு லெட்சுமி என்ற மனைவியும் இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் முதியவர் ராஜா தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேட்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


