News April 8, 2025
தங்க நகையை பத்திரமாக ஒப்படைத்த சிறுமிகள்

திருத்தணி முருகன் கோயிலில், நேற்று (ஏப்ரல் 7) திரளான பக்தர்கள் வருகை தந்தனர். கோயில் பார்க்கிங் பகுதியில் ரூ.1,50,000 மதிப்புள்ள தங்க காப்பு ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்த சிறுமிகள் பத்திரமாக அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, நகையை தவறவிட்ட பக்தர் போலீசாரிடம் வந்து புகார் அளிக்க வந்தபோது, போலீசார் அந்த நகைகளை ஒப்படைத்து சிறுமிகளை பாராட்டி வாழ்த்தினர். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 13, 2025
திருவள்ளூர்: ரூ.88,000 சம்பளத்தில் அரசு வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட பட்டதாரிகளே.., மத்திய அரசின் ECGC நிறுவனத்தில் காலியாக உள்ள 30 ’Probationary Officer’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.88,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க டிச.2ஆம் தேதியே கடைசி நாள். இதற்கு விருப்பமுள்ளவர்கள் <
News November 13, 2025
திருவள்ளூர் மாவட்டம் சாதனை!

புதுடில்லியில் வரும் நவ.18ஆம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை சார்பில் 2024 ஆம் ஆண்டிற்கான மழைநீர் சேகரிப்பு, நீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள், மாவட்டங்கள் மற்றும் ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, ஒன்றியம் பாலாபுரம் ஊராட்சி தேசிய அளவில் 3ஆவது சிறந்த ஊராட்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
News November 13, 2025
திருவள்ளூர்: கஞ்சா சாக்லெட் விற்ற பெண் கைது!

திருவள்ளூர்: ஆவடி அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அரசு பள்ளி அருகே கஞ்சா சாக்லேட் விற்கப்படுவதாக ஆவடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆவடி போலீசார் நேற்ற்ய் (நவ.12) மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்திய போது கஞ்சா சாக்லேட் விற்றுக் கொண்டிருந்த கீதா(40) என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசார் அவரிடம் இருந்து இரண்டரை கிலோ எடையுள்ள 516 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர்.


