News March 30, 2024
தங்க தேரில் பவனி வந்த காமாட்சி அம்மன்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் பங்குனி மாத வெள்ளிக்கிழமை ஒட்டி இன்று கோவிலில் சிறப்பு தங்க தேர் பவனி நடைபெற்றது. இதில் காமாட்சி அம்மன் லட்சுமி சரஸ்வதி உடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்கத் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
Similar News
News January 8, 2026
காஞ்சி: +2 மாணவன் துடிதுடித்து பலி!

காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (16) +2 படித்து வந்துள்ளார். நேற்று இரவு டியூஷன் முடித்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, கோவூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும், சரவணன் வந்த பைக்கும் நேருக்கு நேர் வேகமாக மோதியது. இதில், சரவணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். மாணவன் பைக்கை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
காஞ்சிபுரம்: பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்

2026-ம் ஆண்டு பொங்கலுக்கு அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ், ரூ.3,000, பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு, இன்று முதல் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 696 நியாயவிலைக் கடைகள் மூலம் 4,13,182 குடும்ப அட்டைதாரர்கள் இப்பரிசுகளை பெற உள்ளனர். நெரிசலை தவிர்க்க டோக்கன் அடிப்படையில் விநியோகம் செய்யப்படும்.