News August 7, 2024

தங்கம் வென்ற அரசு பள்ளி மாணவி

image

அண்ணா நகரைச் சேர்ந்த நட்சத்திரா என்ற மாணவி, கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர், டேக்வாண்டோ போட்டிகளில் தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்று வீடு நேற்று திரும்பினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் புவனேஸ்வரி பெருமாள், அவரது இல்லத்தில் தங்க மங்கை நட்சத்திராவை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

Similar News

News October 17, 2025

கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் தங்களுக்கு உள்ள பல்வேறு விதமான பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் நேரடியாக எடுத்துரைத்தனர் இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 17, 2025

கள்ளக்குறிச்சி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

image

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த <>லிங்கில் சென்று<<>> இன்று-17 முதல் நவ-10, வரை விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 17, 2025

கள்ளக்குறிச்சியில் இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

image

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். 3) அதில் Subsidy for eScooter/என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். 4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். 5) விண்ணப்பிக்க தெரியாதவர்கள் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!