News April 7, 2025
தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகம்

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன்பிடி துறைமுகமும் அமைய உள்ளது என முதல்வர் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.60 கோடியில் பாம்பன் பகுதியிலும், ரூ.150 கோடியில் குந்துகால் பகுதியிலும் மீன்பிடி துறைமுக பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். உங்க ஊர் திட்டத்தை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.
Similar News
News April 8, 2025
ராமநாதபுரம் அங்கன்வாடியில் வேலை ரெடி

ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 84 பணியாளர், 3 குறு அங்கன்வாடி பணியாளர், 38 உதவியாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. விண்ணப்பிக்க விரும்புவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஏப்.23 க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 – 12500 வரை வழங்கப்படும்.
News April 8, 2025
ராமநாதபுரத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக இன்று (ஏப்.08) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News April 8, 2025
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் விபர பட்டியல் மற்றும் அலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, கீழக்கரை மற்றும் திருவாடானை பகுதிகளில் இன்று (ஏப்ரல்.07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து அதிகாரிகள் மற்றும் அலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு ஹலோ போலீஸ் எண்கள் 83000 31100 (அ) 100ஐ அணுகவும்.