News May 17, 2024
தங்கக் கோவிலுக்கு வந்தே பாரத்தில் வந்த தமிழிசை!

முன்னாள் ஆளுநரும், பாஜகவின் முக்கியத் தலைவருமான தமிழிசை இன்று (மே 17) காலை தனது கணவர் சவுந்தரராஜனுடன், வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார். அப்போது, கோவில் சார்பாக அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக தமிழிசை தனது கணவனுடன் வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 17, 2025
SIR படிவங்களை உதவி மையங்களில் பூர்த்தி செய்யலாம்

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான சுப்புலெட்சுமி இன்று (நவ.17) அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்ய அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்து இருந்தார்.

வேலூரில் 4 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

வேலூரில் வருவாய் அலகில் 4 தாசில்தார்களை நேற்று (நவ16) பணியிட மாற்றம் செய்து கலெக்டர் இரா.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். குடியாத்தம் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கோடீஸ்வரன் வேலூர் மாவட்ட துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், வேலூர் கிழங்கு மேலாளராக (டாஸ்மாக்) பணியாற்றி வந்த செல்வி வேலூர் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் தனி தாசில்தார் ஆகவும் பணி மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.