News April 18, 2025
தக்காளி காய்ச்சல்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தக்காளி காய்ச்சல் குழந்தைகளிடம் அதிகளவு காணப்படுகிறது. இதுகுறித்து பேசிய சுகாதார துறையினர் இந்த காய்ச்சல் பொதுவாக சுகாதாரம் இல்லாததால் பரவுகிறது. எப்போதும் குழந்தைகள், பெரியவர்கள் சுகாதாரத்துடன் இருப்பது அவசியம். பள்ளி செல்லும் குழந்தைகள் நண்பர்களுடன் விளையாடிவிட்டு வீட்டுக்கு வரும்போது கை, கால், முகம் கழுவுவது அவசியம் என அறிவுறுத்தியுள்ளனர்.
Similar News
News September 16, 2025
கோவை காவல்துறை எச்சரிக்கை!

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு “போலி மின்னஞ்சல்கள் மற்றும் குறுந்தகவல்களிடம் எச்சரிக்கை” என விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெரியாத எண்கள், மின்னஞ்சல்களில் வரும் குறுஞ்செய்திகளை திறக்க வேண்டாம் என்றும், திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டு, பண இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே கவனமாக இருக்க மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 16, 2025
கோவை மாநகர காவல்துறை விழிப்புணர்வு

கோவை மாநகர காவல்துறை தனது முகநூல் பக்கத்தில் சமூக ஊடக டிஎம்ஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளது. அதன்படி சமூக ஊடக டிஎம்எஸ்களில் வரும் தெரியாத இணைப்புகளை திறந்தால் தனிப்பட்ட தகவல் திருட்டும், பண இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (15.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.