News June 27, 2024
தகவல் அறியும் உரிமை சட்ட மேல் முறையீடு வழக்கு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் இன்று தகவல் அறியும் உரிமைச் சட்ட வழக்குகளின் இரண்டாம் கட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நடைபெற்றது. தமிழ்நாடு மாநில தகவல் உரிமை ஆணையர் திருமலை முத்து தலைமையில் நடைபெற்ற இந்த விசாரணையில் ஏராளமான மனுக்கள் மீது விசாரணை நடந்தது.
Similar News
News January 1, 2026
தூத்துக்குடி: இளம்பெண் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை?

கீழவைப்பார் கிராமத்தைச்சேர்ந்த மெரின் என்பவரின் மனைவி இன்ஃபன்ட் தீபிகா (34). இன்ஃபன்ட் தீபிகாவிற்கு சில வருடங்களாக சர்க்கரை நோய் பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது, இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த இன்பன்ட் தீபிகா தனது கணவர் மெரினுக்கு தனது குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள்ளுமாறு கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து குளத்தூர் போலீசார் விசாரணை.
News December 31, 2025
தூத்துக்குடி: ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு

நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (68). இவர் இன்று காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத் – ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார். அப்போது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 31, 2025
தூத்துக்குடி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 04449076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். SHARE பண்ணுங்க


