News August 3, 2024
தகரை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சின்னசேலம் அடுத்த தகரை ஊராட்சியில் நேற்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இதில் எம்எல்ஏ உதயசூரியன் தலைமையேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன் முன்னிலையில் கள்ளக்குறிச்சி துணை ஆட்சியர் குப்புசாமி மனுக்களை பெற்றார். நத்தம், புறம்போக்கு, மந்தவெளி போன்ற இடங்களில் 10 ஆண்டுகள் மேல் குடி இருந்தால் பட்டா வழங்கப்படும் என எம்எல்ஏ கூறினார்.
Similar News
News October 16, 2025
உளுந்தூர்பேட்டையில் நடந்து சென்றவர் மீது பைக் மோதி விபத்து

உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த முத்துலிங்கம் தனது வீட்டில் இருந்து சேலம் ரவுண்டானா நோக்கி நடந்து சென்றுகொண்டு இருந்தார். அதே சாலையில் பின்னால் வந்த உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த குணசேகரன் என்பவரது பைக் மோதிய விபத்தில் முத்துலிங்கம் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரில் குணசேகரன் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் இன்று அக்.15 வழக்கு பதிவு செய்தனர்.
News October 15, 2025
இரவு நேர ரோந்து பணி குறித்து மாவட்ட காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக் 15-ம் தேதி ) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
News October 15, 2025
கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தீபாவளி போனஸ் மனு

கள்ளக்குறிச்சி மாவட்ட தொழிலாளர் அலுவலர் அலுவலகத்தில் இன்று கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நல வாரியத்தின் கீழ் போனஸ் தொகை 5000 ரூபாய் வழங்க வலியுறுத்தி கட்டுமான சங்கத்தின் மாவட்ட தலைவர் பச்சையப்பன் அவர்கள் தலைமையில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.