News March 4, 2025
டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
வேலூரில் தனித்துவ அடையாள அட்டை வழங்கும் முகாம்!

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் முகாம் டிசம்பர் 2025 முதல் மாதத்தின் புதன்கிழமைகளில் நடைபெற இருக்கிறது. இது அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நடைபெற உள்ளது. மேலும், வெள்ளிக் கிழமைகளில் குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.27) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
News November 27, 2025
வேலூரில் அவலம் – விவரம் வெளிவந்தது!

ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்தில் உள்ள செங்கல் சூளையில், வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களை அதிகாரிகள் மீட்டனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை அந்த தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணம், முழு மருத்துவ பரிசோதனை ஆகியவை செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து வேலுார் கலெக்டரிடம் மலைவாழ் மக்கள் சங்கத்தினர் இன்று (நவ.27) மனு அளித்துள்ளனர்.
News November 27, 2025
வேலூர் கலெக்டர் தலைமையில் ஆலோசனை!

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய 2 தினங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (நவ 27) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


