News March 27, 2025
டெபாசிட் வட்டியை குறைக்கும் வங்கிகள்

ஏப்ரல் மாதம் முதல் டெபாசிட் பணத்துக்கான வட்டியை குறைக்க வங்கிகள் திட்டமிட்டுள்ளன. கடந்த மாதம், ரிசர்வ் வங்கி, ரெபோ வட்டியை குறைத்தது. இதனையடுத்து, லோன்களுக்கான வட்டியை குறைத்த வங்கிகள் டெபாசிட் வட்டியில் மாற்றமில்லாமல் வைத்திருந்தன. இதனால், வங்கிகளின் லாபம் குறைவதால், அடுத்த மாதம் முதல் டெபாசிட் வட்டியை குறைக்கத் திட்டமிட்டுள்ளன. இதனால், மக்களின் FDக்கான வட்டி குறையும்.
Similar News
News April 3, 2025
வக்ஃப் சொத்துகள் எவ்வளவு தெரியுமா?

இஸ்லாமியர்களால் தானமாக வழங்கப்படும் வக்ஃப் சொத்துகளை, அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இச்சொத்துகளை நிரந்தரமாக குத்தகைக்கு விடவோ, விற்கவோ முடியாது. விவசாய நிலங்கள் முதல் கல்வி நிலையங்கள் வரை, வக்ஃப் வாரிய கட்டுப்பாட்டில் சுமார் 9.4 லட்சம் ஏக்கர் நிலம் (ரூ.1.2 லட்சம் கோடி மதிப்பு) உள்ளது. ரயில்வே, ராணுவத்துக்கு அடுத்து, நாட்டில் அதிக நிலம் வைத்துள்ள உரிமையாளர் வக்ஃப் வாரியம் தான்.
News April 3, 2025
தென்னிந்தியாவில் பேய் மழை கொட்ட போகுது: IMD

மத்திய மற்றும் தென்னிந்தியாவில் அடுத்த சில நாட்களில் கன மழை பெய்யக்கூடும் என்று IMD எச்சரித்துள்ளது. கேரளா, மாஹே, தமிழ்நாடு, கர்நாடகா, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நாளை முதல் 3 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அப்போ, குடையை எடுத்து ரெடியா வைங்க.
News April 3, 2025
வக்ஃப் சொத்து என்பது என்ன?

வக்ஃப் சட்டம் 1995-ன் படி, எந்தவொரு முஸ்லிமும் தனது அசையும் மற்றும் அசையா சொத்துகளை கடவுளின் (அல்லாஹ்) பெயரில் பக்தி, தர்மம் அல்லது மத நோக்கத்திற்காக நிரந்தரமாக அர்ப்பணித்தால், அத்தகைய அர்ப்பணிப்பு வக்ஃப் என்றும், அத்தகைய சொத்து வக்ஃப் சொத்தும் எனவும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் வழங்கும் இந்த சொத்துகளை அச்சமூகத்தினரே நிர்வகிக்கின்றனர். இதற்காக மத்திய, மாநில வக்ஃப் வாரியங்கள் உள்ளன.