News January 2, 2025
டெங்கு காய்ச்சல் பாதித்த 6 பேருக்கு சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு பரவலாக இருந்து வருகிறது. கோவை அரசு மருத்துவமனையில், தற்போது டெங்கு காய்ச்சல் பாதித்த, 6 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதிப்பு காரணமாக, தினமும் 50 முதல் 60 பேர் வரை, புற நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 1, 2025
கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

கோவை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால் ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.
News November 1, 2025
கோவை: ரயில்வேயில் 8,850 பேருக்கு வேலை! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியத்தில் காலியாக உள்ள 8,850 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கல்வித்தகுதி: 12th Pass, Any Degree. சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025. ஆன்லைனில் என்ற https://www.rrbchennai.gov.in/ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 1, 2025
கோவை: ரூ.3 லட்சம் வரை கடன்!

கோவை: பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கான மின்சார ஆட்டோ திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கி சார்பில் தலா ரூ.3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. கோவை மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் 39 கிளைகளில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. 25 முதல் 45 வயது வரை உள்ளவர்கள், ஓட்டுநர் உரிமம் மற்றும் பேட்ச் கொண்டிருக்க வேண்டும். உடனே, வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ( SHARE பண்ணுங்க)


