News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு ஏற்படுத்தி <>தரப்படும்<<>>.

Similar News

News December 11, 2025

திருப்பத்தூர்: செக் மோசடி; பலே கில்லாடிகள் கைது!

image

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் சுந்தரம்பள்ளி பகுதியில் கடந்த மாதம் சென்னையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்(35), மதுமிதா(31) ஆகியோர் ரூ.7 கோடி மதிப்புள்ள நிலத்துக்கு ரூ.3 கோடி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபட்டனர். இதுகுறித்து நில உரிமையாளர்கள் பழனி(36), சரோஜா(32) ஆகியோர் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று(டிச.10) இரவு, கந்திலி போலீசார் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

News December 11, 2025

திருப்பத்தூரில் மின்னணு இயந்திரங்கள் ஆய்வு

image

திருப்பத்தூரில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் இன்று (டிச.11) மேற்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனான இந்த ஆய்வு மாவட்ட ஆட்சியர் சிவ சௌந்தரவல்லி தலைமையில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 4 தொகுதிகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

News December 11, 2025

திருப்பத்தூர் காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் காவல்துறையின் சார்பில் தினம்தோறும் ஓர் எச்சரிக்கை செய்தி வெளியிடப்படுகிறது. அவ்வாறு இன்று (டிச.11) வெளியிடப்பட்ட செய்தியில் Instagram-ல் லைக் போட்டால் பணம் கிடைக்கும் என்னும் விளம்பர குறுஞ்செய்தியை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இவ்வாறு முதலில் சிறிய தொகையை கொடுப்பதுபோல் கொடுத்து பின்னர் பெரிய தொகையை திருடும் சைபர் குற்றவாளிகளிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!