News March 28, 2025
டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் வேலைவாய்ப்ப்பு <
Similar News
News December 19, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின்தடை!

ஓரிக்கை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை, ஓரிக்கை, எண்ணைக்காரத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 19, 2025
BREAKING: காஞ்சிபுரத்தில் 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், ஆலந்தூர், ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை இன்று அனைத்து கட்சியினர் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார். மொத்த வாக்காளர்கள் 14,01,198. SIR-க்கு பின் வாக்காளர்கள் 11,26,924 என உள்ளனர். மொத்தம் 2,74,274 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளது.
News December 19, 2025
காஞ்சிபுரம்: கேஸ் புக் செய்வது இனி ஈசி!

காஞ்சிபுரம் மக்களே.., கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்ஆப் மூலமாக எளிதாக, விரைவாக புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!


