News March 28, 2025

டெக்னீஷியன் பயிற்சி: ரூ.20,000 சம்பளத்தில் வேலை

image

பழங்குடியின இளைஞர்ளுக்கு உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெல்டிங், ரெப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனிங், பைக் – கார் சர்வீஸ் ஆகிய டெக்னீஷியன்களுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் இடம், உணவு வசதியுடன் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியை முடித்தல் ரூ.15,000 – ரூ.20,000 சம்பளத்தில் <>வேலைவாய்ப்ப்பு <<>>ஏற்படுத்தி தரப்படும்.

Similar News

News December 14, 2025

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து 50 பசுமாடுகள் கடத்தல்!

image

செங்கல்பட்டு: ஆந்திராவில் இருந்து பொள்ளாச்சிக்கு, கண்டெய்னர் லாரியில் பசுமாடுகள் கடத்தப்படுவதாக ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்டெய்னர் லாரியை பரனூர் சுங்கச்சாவடியில் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து போலீசார் வந்து விசாரித்ததில், கண்டெய்னரில் 50 பசு மாடுகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை லாரியோடு பறிமுதல் செய்த போலீசார், மாடுகளை வாங்கிய ஸ்டான்லியிடம் விசாரித்து வருகின்றனர்.

News December 14, 2025

செங்கல்பட்டு: AC வெடித்து தீப்பிடித்த வீடு!

image

செங்கல்பட்டு: கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூரைச் சேர்ந்தவர் ஜெகநாதன் (38). இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, படுக்கை அறையில் இருந்த ஏ.சி. எந்திரம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக ஜெகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே ஓடி வந்துவிட்டனர். இதில், வீடு தீப்பிடித்த நிலையில், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.

News December 14, 2025

செங்கல்பட்டு: மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த நபர்!

image

செங்கல்பட்டு: சிவகங்கையைச் சேர்ந்த பிரபு (27), தாம்பரத்தில் தங்கி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகே தனது மனைவியுடன் செல்போனில் பேசியுள்ளார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், பிரபு மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!