News April 12, 2025
டூவீலரில் சேலை சிக்கிபெண் பலி

ராமநாதபுரம், R.S மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவருடன் நேற்று காலை ஊரிலிருந்து டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். தெரிந்த பெண்களுக்கு SHARE செய்து பைக்கில் செல்லும்போது விழிப்புணர்வுடன் இருங்க சொல்லுங்க.
Similar News
News April 15, 2025
பவளப்பாறைகளின் சொர்க்கம்

பிச்சை மூப்பன் வலசை என்பது ராமநாதபுரம், ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கடற்கரை கிராமம். இது மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ளது. மேலும் சூழல் சுற்றுலாவுக்கு ஒரு முக்கிய இடமாக விளங்குகிறது.
இங்கு மணல் திட்டுகள், பவளப்பாறைகள், கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் தாவரங்கள் என பல இயற்கை அழகுகளைக் கொண்டிருக்கிறது. (விடுமுறையை கழிக்க ரூ.200 செலவில் நீங்கள் இந்த இடத்திற்கு செல்லலாம்) *ஷேர் பண்ணுங்க
News April 15, 2025
மீனவர்களுக்கான இன்றைய (ஏப்.15) வானிலை அறிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் முதல் இராமேஸ்வரம் வரை உள்ள மீனவர்கள் பயன்படும் வகையில் வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இன்று (ஏப்.15) காற்றின் வேகம் 04 கிலோமீட்டர்/மணி முதல் 11 கிலோமீட்டர்/மணி வரை வீசக்கூடும், காற்றின் திசை வடக்கு நோக்கி இருக்கும். மேலும் மழைக்கான வாய்ப்பு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 15, 2025
ராமநாதபுரத்தில் ரூ.15,000 சம்பளத்தில் வேலை

ராமநாதபுர மாவட்டத்தில் உள்ள பிரபல் நகை கடையில் 20 க்கும் மேற்பட்ட விற்பனை கூட்டாளர் காலிபணியிடங்கள் உள்ளது. இந்த பணிக்கு 10ம் வகுப்பு படித்த 21 வயது முதல் 35 உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும். . இங்கு <