News March 28, 2025
டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

கோனூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (50).இவர் கடந்த 25-ந் தேதி தனது டூவீலரில் கோனூர் கந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
Similar News
News January 7, 2026
நாமக்கல்: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே.., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள், ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ள நிலையில் ரொக்கம்ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாமல் போக வாய்ப்புண்டு. இந்த சிக்கலை தீர்க்க இப்பவே <
News January 7, 2026
நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News January 7, 2026
நாமக்கல்: 50% தள்ளுபடியில் ரூ.3 லட்சம் கடன்

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <


