News March 29, 2024
டீ போட்டு வாக்கு சேகரித்த வேட்பாளர்

கரூர் தான்தோன்றி மலை பகுதியில் இன்று காலை மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் கருப்பையா வாக்காளர்களை கவரும் விதமாக டீக்கடைக்கு சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது டீ போட்டுக் கொடுத்தும் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து காந்திகிராமத்தில் உள்ள உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
Similar News
News April 9, 2025
கரூரில் மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04324-296650
▶️பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 04324-255305 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04324-256508 ▶️மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04324-256728 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News April 9, 2025
கரூர் ‘குடி’மகன்களே உஷார்;10-ம் தேதி மது கிடைக்காது!

கரூர் மாவட்டத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் FL2 உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் மதுக்கூடத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
News April 9, 2025
க.பரமத்தியில் 96.8 டிகிரி செல்சியஸ் பதிவு

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டாம்.