News January 22, 2025
டி20 போட்டி – பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்

சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 25ஆம் தேதி டி20 போட்டி நடக்க உள்ள நிலையில், பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டள்ளது. கடற்கரை- வேளச்சேரிக்கு இரவு 9.50க்கு புறப்படும் ரயில் 10 மணிக்கும், இரவு 10.20க்கு புறப்படும் ரயில் 10.30 மணிக்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. மறுமார்கத்தில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் சேப்பாக்கத்தில் 10 நிமிடம் நிற்கும் (10.27 PM- 10.37 PM) என அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 23, 2025
சென்னை: புது மனைவியை கொன்ற கணவன்!

சென்னை குன்றத்தூரில் மனைவியை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 9 நாள்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கு குடும்ப சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த கணவர் காதல் மனைவியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 23, 2025
சென்னை: புத்தாண்டு கொண்டாட்டம்… ஐகோர்ட் அதிரடி

சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் 2025 புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, மது அருந்தும் இடத்திற்கு குழந்தைகள் அழைத்துவரப்பட்டதாக எம். காமேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் புகார் வந்தால் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் குழந்தைகள் நல ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது
News December 22, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (22.12.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்.


